இந்தியா

வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.36 லட்சம்; தொகுதி நிதியில் வைத்திலிங்கம் வழங்கினார்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக வைத்திலிங்கம் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் நாராயணசாமி எடுத்து வருகிறார். ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ ரீதியான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திணறி வருகின்றன.

இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை எதிர்கொள்ள ஒரே தீர்வு நாம் அனைவரும் அவரவர் இல்லத்தில் இருந்து நோய் பரவாமல் தடுப்பதுதான்.இதைத்தான் நமது பிரதமரும் தன்னுடைய உரையில் லட்சுமண் ரேகையை தாண்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நமது பிரதமர், மாநில முதல்வர் ஆகியோர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் நம்முடைய இருப்பிடத்தில் இருப்பதன் மூலம் நம்மை காத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டையும் காத்துக்கொள்ளலாம். இதை நாம் செய்யத் தவறினால் பிரதமர் கூறியதுபோல் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பங்கெடுக்கும் பொருட்டு, நமது மருத்துவமனைகளின் தேவையை கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் சாதனமான மூன்று வென்டிலேட்டர் வாங்குவதற்காக ரூ.36 லட்சத்தை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கியுள்ளேன். மேலும், ஏதாவது அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுக்கு உதவ தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, எம்.பி., தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X