வாகனங்கள் கழுவுவதால் பாதிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனங்கள் கழுவுவதால் பாதிப்பு தண்ணீர் மாசடையும் அபாயம்

Added : மார் 26, 2020
Share

கோத்தகிரி : கோத்தகிரி புதுார் நீராதாரத்தில் வாகனங்கள் கழுவுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.கோத்தகிரி-கோடநாடு சாலையில் கேர்பெட்டா புதுார் அமைந்துள்ளது. இப்பகுதியில், வனத்துறைக்குசொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.வனத்துறை பராமரித்து வரும் இந்த நீராதாரத்தை பாதுகாக்கும் பொருட்டும், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையிலும், இங்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.மேலும், வறட்சி நாட்களில், கோத்தகிரி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், இந்த நீராதாரத்தில் இருந்து, தண்ணீர் எடுத்து, நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பல நாட்களாக, இந்த நீராதாரத்தை ஒட்டிய சாலையில், வாகனங்கள் கழுவப்படுவது தொடர்கிறது. இதனால், தண்ணீர் மாசுபட்டு, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தத் தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, மக்கள் நலன் கருதி, புதுார் நீராதாரத்தில், வாகனங்கள் கழுவுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X