இந்தியா

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்

புதுச்சேரி : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காலங்களில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தடை உத்தரவு மீறியதாக இன்று (நேற்று) 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு காலங்களில், பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் என மூன்று மாவட்ட கலெக்டர்களின் நேரடி பார்வையில், அத்தியாவசிய பொருட்களை எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், 'இன்டர் டிஸ்ட்டிரிக் செல்' என்ற தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

பால், மருந்து, மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கண்காணிப்பில் இருந்து வந்த, 21 பேர் வீடு திரும்பி உள்ளனர் என்றார்.'' சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் கூறுகையில் ''கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும், தங்களின் அடையாள அட்டையை வெளியில் தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், அவர்களை நிறுத்தி விசாரிப்பதற்கான நேரம் நமக்கு மிச்சமாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சமுக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துக்கள் மற்றும் வதந்திகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு பேரை தேடி வருகிறோம். கொரோனா பாதிப்பு அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதால், தடை உத்தரவை மீறி யாரும் வெளியில் வர வேண்டாம்''என்றார்.பேட்டியின் போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X