பொது செய்தி

தமிழ்நாடு

நீயா...நாங்களா பார்த்துருவோம் கொரோனா! நகர் முழுவதும் கிருமி நாசினி 'ஸ்ப்ரே' தெளிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, கோவை மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க, 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, நகர் முழுவதும் சுகாதாரப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.பொது இடங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், ஸ்டாப்புகள் மற்றும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் விதமாக, 'ஸ்பான்சர்' மூலமாக, கோவை மாநகராட்சி, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 250 'ஸ்பிரேயர்' வாங்கியது.அவற்றை, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.

கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கென துாய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம், கிருமி நாசினியுடன் கூடிய, 'கிட்' வழங்கப்பட்டது. 'டிரோன்' மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்க, சோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது.பின், வைரஸ் தொடர்பாக, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு செய்தபடி, தேவைப்படும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்க, மண்டலத்துக்கு தலா ஐந்து வாகனங்களின் இயக்கம், துவக்கி வைக்கப்பட்டது. இதற்கென, 250 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது தவிர, லாரிகளில் தண்ணீருடன் பிளீச்சிங் பவுடர் கலந்து, தெளிக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றை சுகாதார ஆய்வாளர்கள், மண்டல உதவி பொறியாளர்கள் கண்காணிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X