இந்தியா

வெளி மாநிலம் சென்று வந்தவருக்கு இருமல்: கிராமத்தை விட்டு விரட்டிய பொதுமக்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கனுார் : கரும்பு வெட்டும் வேலைக்கு ஈரோடு சென்று வந்தவருக்கு இருமல் இருந்ததால், அச்சமடைந்த கிராம மக்கள் அவரை ஊரைவிட்டு வெளியே செல்லும் படி விரட்டி அனுப்பினர்.

புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு முருகாவரத்தை சேர்ந்தவர் விநாயகம்,40; கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், வேலைக்கு ஈரோடு சென்றிருந்தார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு திரும்பினார்.இந்நிலையில், விநாயகத்திற்கு இருமல் தொந்தரவு இருந்தது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சோரப்பட்டு அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் வம்புப்பட்டு வந்து, விநாயகத்தை பரிசோதனை செய்துவிட்டு, சாதாரண இருமல் தான், காய்ச்சல் ஏதுவும் இல்லை, இருப்பினும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்படி கூறிவிட்டு சென்றனர்.

ஆனால், விநாயகம் மருத்துவமனைக்கு செல்லாமல், குடிபோதையில் வம்புப்பட்டு கிராமம் முழுவதும் சுற்றித்திரிந்தார்.அச்சமடைந்த கிராம மக்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஈரோடு சென்று திரும்பிய விநாயகம் மற்றும் அவரது தம்பி மோகன் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு ஊரில் நுழைய தடைவிதித்து, ஊருக்கு வெளியேயுள்ள ஐயனாரப்பன் கோவிலுக்கு விரட்டி அனுப்பினர்.

இதற்கிடையே, இரவு முழுவதும் ஐயனாரப்பன் கோவிலில் இருந்த இருவரும் நேற்று காலை முதல் காணவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X