பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரியை சேர்ந்த சமூக சேவகி, துாய்மை பணியாளர்களின் ஆக்கப்பூர்வ பணியை ஊக்குவிக்கும் வகையில், 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுடன், மாநில சுகாதார துறை தீவிரம் காட்டி வருகிறது. இதில், துாய்மை பணியாளர்களின் பணி மகத்தானது.இவர்களது அர்ப்பணிப்பு பணியை ஊக்குவிக்கும் விதமாக, கோத்தகிரி கடைகம்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக சேவகி சுசீலா, 66, கோத்தகிரி தாசில்தார் மோகனாவிடம், 25 ஆயிரம் ரூபாயை துாய்மை பணியாளர்களின் நலனுக்காக வழங்கினார்.

அத்துடன், கல்லூரி முதலாமாண்டு படித்துவரும் தனது பேரன், ஜோகி ரித்திக் சேகரித்து வைத்திருந்த, 3,500 ரூபாய் நாணயங்களையும் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட தாசில்தார் அவர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X