பொது செய்தி

தமிழ்நாடு

ஒருநாள் விட்டு ஒருநாள் வியாபாரம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஊட்டி : 'ஊட்டி மார்க்கெட்டில் வரும் கூட்டத்தை குறைக்கும் வகையில், ஒருநாள்விட்டு, ஒரு நாள் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில், 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடுப்பட்டுள்ளது.144 தடை உத்தரவையடுத்து, அத்யாவசிய கடைகளை தவிர, பிற கடைகள் மூடப்பட்டன. ஊட்டி மார்க்கெட்டில், மளிகை, காய்கறி கடைகள் என, 350 கடைகள் திறக்கப்பட்டன. 144 தடை உத்தரவு இருந்தும் கூட, அத்யாவசிய பொருட்களை பெற மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதை தொடர்நது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா; நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஆகியோர் மார்க்கெட் பகுதிக்கு, நேற்று வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தினர்.

மேலும், 'கடைகளில் குறைந்த நபர்கள் மட்டுமே நிற்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''கொரோனா அச்சம் காரணமாக, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை குறைக்க மார்க்கெட்டில் அத்தியாவசிய கடை வியாபாரிகள் மட்டும், காலை, 7:00 மணிமுதல், மாலை, 5:00 மணிவரை, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கடை திறந்து வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளின்படி, ஒருவர் வந்து சென்ற பின்பு, இடைவெளிவிட்டு மற்றவர்கள் வர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X