சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய தொழிற்சாலைகள் பூட்டு போட்ட அதிகாரிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பந்தலுார் : பந்தலுார் கூட்டுறவு மற்றும் கொளபள்ளி தனியார் தேயிலை தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் கூட்டமாக ஈடுபட்டதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து பூட்டு போட்டனர்.

நீலகரியில், மாவட்டத்தில், 144 உத்தரவு உள்ள நிலையில், பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கிரிஜா உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர்.அப்போது,'கொள்முதல் செய்த பசுந்தேயிலையை அரைத்த பின்னர் தொழிற்சாலை மூடப்படும்,' என, நிர்வாகம் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்காத அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி, தொழிற்சாலைக்கு பூட்டு போட்டனர். இதேபோல், கொளப்பள்ளி பேக்டரி மட்டம் பகுதியில், தனியார் தொழிற்சாலை செயல்பட்டது. தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் காமு நேரில் சென்று, தொழிற்சாலையை பூட்டி, தொழிலாளர்களை வெளியேற்றினார். அதிகாரிகள் கூறுகையில்,' அரசின் உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X