பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்'ல் ஆர்டர் எடுத்து மக்கள் நெரிசலை தவிர்க்கலாம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பேரூர் : அத்தியாவசிய கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, உரிமையாளர்கள் மொபைல் எண்கள் வாயிலாக ஆர்டர் எடுத்து விற்பனை செய்தால், அனைவரின் பாதுகாப்பும் உறுதியாகும்.

தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பித்த நாள் முதல், அத்தியாவசிய கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, இறைச்சி, மளிகைக் கடைகளில், நாள்தோறும் காணப்படுகிறது. இதனால், தடையின் நோக்கம் வீணாகி, 'கொரோனா' பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசுகள் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், தனி மனித ஒத்துழைப்பின்றி 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க முடியாது.நேற்று காலையில், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், ஆலாந்துறை பகுதிகளில் உள்ள, இறைச்சி மற்றும் மளிகைக்கடைகளில், மக்கள் நெருக்கியடித்தபடி நின்றிருந்தனர்.

இதனால் கொரோனா எளிதில் பரவும் என்பதால், கடை உரிமையாளர்கள், தங்களின் மொபைல் எண்களை தகவல் பலகையில் எழுதி, அதன் வாயிலாக ஆர்டர் பெறலாம்.இத்துடன், வாட்ஸ் ஆப்பிலும் ஆர்டர் பெற்று, தயாரானதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வரவழைக்கலாம். இத்தகைய நடவடிக்கையை, சில தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ளன.இதனால், மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது. அஜாக்கிரதையாக இருந்து, 'கொரோனா'வை உங்கள் கதவுகள் மட்டுமின்றி, மற்றவர்களின் கதவுகளையும் தட்ட வைத்து விடாதீர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X