பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட 732 நபர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஊட்டி : 'நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, 732 நபர்கள் பொது இடங்களில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:கொரோனா தொற்று நோய் தடுப்பு தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கள அலுவலர்களாக, வட்ட அளவில் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு, சட்டம் -ஒழுங்கு சம்பந்தமான நிகழ்வுகளையும், 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தை அமல்படுத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அத்யாவசிய பணிகள், அரசு பணிகளில் இருக்கும் அலுவலர்கள், அவர்கள் சொந்த வாகனத்தை இயக்க சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும், 'மத்திய விமான ஆணையம் தந்த பட்டிலில் உள்ளவர்கள்; மாவட்ட எல்லை சோதனை சாவடி வழியாக வந்தவர்கள்,' என, 732 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, பொது இடங்களுக்கு சென்றால்,அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, தனிமை படுத்தப்பட்ட நபர்கள் எவரேனும் பொது இடங்களில் சுற்றுவதை கண்டால், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, 1077 எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X