பொது செய்தி

தமிழ்நாடு

சிறைக்கைதிகள் தயாரிக்கும் முகக்கவசம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும், முகக்கவசங்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, முகக்கவசம் முக்கியம். தேவை அதிகரிப்பால், முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதைப் போக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள், தனியார் அமைப்புகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய சிறைக்கைதிகள் மூலம், மாஸ்க் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் முகக்கவசங்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மத்திய சிறையில் முதற்கட்டமாக, 10 கைதிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு இதற்கான ஊதியமும் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X