இந்தியா

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி பொது சுகாதாரத்தில் ஆர்வம் காட்டும்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி  பொது சுகாதாரத்தில் ஆர்வம் காட்டும்

திருக்கனுார் : திருக்கனுார் பகுதியில் கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு, கிராம மக்கள், சுய உதவிக்குழுவினர் இணைந்து கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, நமது முன்னோர்கள் காலரா, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களை விரட்ட மேற்கொண்ட இயற்கை கிருமி நாசினிகளை, தற்போது மீண்டும் கிராம மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, திருக்கனுார் கிராமத்தில், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து வீதிகள் மற்றும் வீட்டு வாசல்களில் மாட்டு சாணம், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கரைசல்களை தெளித்து சுத்தம் செய்வதோடு, வீட்டு வாசல்களில் வேப்பிலை தோரணம் கட்டி வருகின்றனர்.இதேபோல், பல்வேறு கிராமங்களிலும், பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை கரைசலை கொடுத்து வருகின்றனர்.மேலும், அரசு சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்காததால், பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் கிருமி நாசினிகளை வாங்கி சாலைகளில் தெளித்து, சுத்தம் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X