இந்தியா

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்கலாம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் குறித்து புகார்களை பொதுமக்கள் மாநில அவசர கால செயல் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1070 மற்றும் 1077 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மேலும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து ஆரோக்கியம் சம்பந்தமான சந்தேகங்களை, அரசின் சுகாதாரத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 104யை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X