பொது செய்தி

தமிழ்நாடு

வெஜ் பிரியாணி... புதினா சாதம் சமுதாய கூடம் தருகிறது வரப்பிரசாதம்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும், சாலையோர ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் வகையில், 'சமுதாய உணவுக்கூட வசதி' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, கோவை வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேற்று மாலை வரை, 200 பேருக்கு உணவு வினியோகிக்கப்பட்டது. தக்காளிசாதம், புளிச்சாதம், வெஜ் பிரியாணி, லெமன் சாதம், புதினா சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம், அரிசி பருப்பு என ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம் வினியோகிக்கப் படவுள்ளது. உணவு தேவைப்படும் மக்கள், வரும் ஏப்., 16ம் தேதி வரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுதாய உணவு கூடங்களில், உணவு பெற்றுச்செல்ல மட்டுமே அனுமதியுள்ளது. வளாகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. கோவை வடக்கு வட்டாச்சியர் மகேஷ் கூறுகையில், ''நாள் ஒன்றுக்கு, 500 முதல் 1000 பேர் வரை, தேவையின் அடிப்படையில் உணவு தயாராக இருக்கும். தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து பணி மேற்கொள்கிறோம். தெற்கு வட்டாச்சியர் அலுவலக பொறுப்பிலும், பேரூர், சூலுார் என அனைத்து பகுதிகளிலும், திருமண மண்டபங்கள் மூலம், உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதால், கூட்டம் போட வேண்டாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X