சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டவர் எண்ணிக்கை 431 ஆக உயர்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவையில், மொத்தம் 431 பேரை, வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக, சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், தாமாகவே முன்வந்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிப்பதால், தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, 431 நபர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி, சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அறிகுறிகள் தென்பட்டால், 108 ஆம்புலன்ஸ் சேவை அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்களான 1077 மற்றும் 0422-230114 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, தேவையான சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''அறிகுறிகள் இருப்பவர்கள், குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டால், உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். ''இன்று (நேற்று) மட்டும் 8 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.,கே.எம்.சி.எச்., அபிநந்த், ராயல்கேர் ஆகிய மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு, அவசர உதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X