மெஹபூபாவையும் விடுவிக்க ஓமர் அப்துல்லா கோரிக்கை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி : ''என்னை விடுவித்தது போல், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மெஹபூபா முப்தி உட்பட, தடுப்பு காவலில் உளளவர்கள் அனைவரையும், மத்திய அரசு விடுவிக்க வேண்டும்,'' என, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான, ஓமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news



மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. இதற்கு முன், ஜம்மு - காஷ்மீரில், முன்னாள் முதல்வர்களும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களுமான பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மெஹபூபா முப்தி உட்பட, அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாதஅமைப்புகளின் தலைவர்கள், 400க்கும் அதிகமானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

தற்போது, ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்கள், படிப்படியாக விடுவிக்கப்ப்டடு வருகின்றனர்.முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா,10 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட நிலையில், ஓமர் அப்துல்லா நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து, ஏழு மாதங்களுக்கு மேல், வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்ட நிலையில், 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கை, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.


latest tamil news



ஓமர் அப்துல்லா விடுதலையையும், 21 நாள் ஊரடங்கையும் சம்பந்தப்படுத்தி, பலர், 'மீம்ஸ்' வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ஓமர் அப்துல்லா நேற்று பதிவியிட்டிருந்ததாவது:நாடு மிகவும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இது, கேலி, கிண்டல் செய்வதற்கான நேரம் அல்ல. ஜம்மு - காஷ்மீரில், வீட்டு காவலில் உள்ள முன்னாள் முதல்வர், மெஹபூபா உட்பட அனைவரையும், மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை, மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பதிவிட்டிருந்தார் .

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
26-மார்-202013:47:15 IST Report Abuse
Nallavan Nallavan ரொம்ப பாசம் ...........
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
26-மார்-202013:46:59 IST Report Abuse
Nallavan Nallavan ஏன் அம்புட்டு அக்கறை ????
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
26-மார்-202012:27:36 IST Report Abuse
Hari உன்னை வெளியே விட்ட்து தவறு ,இனி வாய் திறக்கமாட்டேன் ,தீவிரவாதிகளோடு சேர்ந்து இந்தியா மக்களை கொல்லமாட்டேன்,குண்டுவைக்க சொல்லமாட்டேன் என எழுதி கொடுத்துட்டுத்தானே வெளியே வந்தாய் அப்படியே பேசாமல் இரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X