சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? கூட்டம் கூட்டி, 'கொரோனா' முன்னெச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் (குறைந்தபட்சம் மூன்று அடி) சமூக இடைவெளி இருக்க வேண்டும்.

ஒருவர் எதிரில் நின்று பேசினாலும், சற்று தள்ளி நின்று, கலந்துரையாட அறிவுறுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஆய்வு கூட்டம் என்கிற பெயரில் தேவையான பெரும் கூட்டத்தை திரட்டக் கூடாது எனவும், மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.இச்சூழலில், நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பதற்கு 'ஸ்பிரேயர்' வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இவ்விரு கூட்டத்திலும், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகாரிகள் வந்த வாகனங்களின் டிரைவர்கள், உதவியாளர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். கிருமி நாசினி தெளிக்க, துப்புரவு பணியாளர்களையும் வரவழைத்திருந்தனர்.நோய் தொற்று வீரியத்தை பற்றி அதிகாரிகளே, விழிப்புணர்வு இல்லாமல், கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமானோரை வரவழைத்து, கூட்டம் நடத்தினர். இதேபோல், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும், 'ஸ்பிரேயர்' தெளிக்கும் துப்புரவாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பிரிவினர் பொறியியல் பிரிவு அதிகாரிகள், மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் இவர்களது வாகன டிரைவர்கள், உதவியாளர்கள் என, ஒரே வளாகத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

கைகளை கழுவுவதற்கு வாஷ்பேசின், கிருமி நாசினி வைத்திருந்தாலும், யாரும் கரங்களை கழுவவில்லை. நோய் தொற்று எளிதாக பரவுவதற்கு அதிகாரிகளே காரணமாக இருந்தனர். இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு.வீட்டை விட்டு வரக்கூடாது!ஊரடங்கு என்று சொன்னாலே, யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது. கோவை நகர் பகுதியில் ஏராளமானோர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர். போலீசாரும் அவர்களிடம் விசாரித்து விட்டு, அனுப்புகின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர, வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது என, பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X