பொது செய்தி

தமிழ்நாடு

4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தினமும் இருமுறை உப்பு தண்ணீர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு தட்டுப்பாடின்றி, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேவையான அளவு குடிநீர், தினமும் இரு முறை உப்பு தண்ணீர் வினியோகிக்க, உதவி/ இளம் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆற்றுப்பகுதிகளில் இருந்து குடிநீர் எடுத்து, வினியோகம் செய்யப்படுகிறது. நான்கு அல்லது, ஐந்து நாட்கள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இருப்பினும் பலர், 'மினரல் கேன் வாட்டர்' குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றனர். அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் வாரந்தோறும் 'கேன் வாட்டர்' வாங்குவர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், அலுவலகங்களுக்கு கேன் வாட்டர் தேவை இருக்காது.மினரல் வாட்டர் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வீடுகளில் வசிப்போர் அவதிப்படுவர் என்பதால், வீட்டு குழாய்களில் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.நான்கு நாட்களுக்கு ஒருமுறை, வழக்கமான சப்ளையை விட கூடுதலாக குடிநீர் வழங்கவும், 'போர்வெல்' (உப்பு தண்ணீர்) தண்ணீர், தினமும் காலை ஒருமுறை, மாலை ஒருமுறை என இரண்டு தடவை வழங்கவும், உதவி/ இளம் பொறியாளர்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X