பொது செய்தி

தமிழ்நாடு

பசியால் வாடியவர்களுக்கு கைகொடுத்த அம்மா உணவகம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்ட நிலையில் திருப்பூர் அம்மா உணவகங்கள் பலரின் பசியை போக்கும் வகையில் இயங்கின.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், 11 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. காலை மற்றும் பிற்பகல் இரு வேளை இவற்றில் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. திருப்பூரில், 10 உணவகங்கள் மட்டும் செயல்படுகின்றன.தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனியார் ஓட்டல்கள் மற்றும் மெஸ்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.அவ்வகையில், திருப்பூரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் வழக்கம் போல் இயங்குகின்றன.

இவற்றில் வழக்கத்தை விட அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வருகை உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமுதாய இடைவெளி அவசியம் என்பதால், உணவகங்கள் முன் கட்டம் போட்டு அவற்றில், வரிசையாக வாடிக்கையாளர்கள் நின்று உணவு வகைகள் வாங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X