சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் வெடித்து குடிசை எரிந்து சாம்பல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர், : திருப்பூரில், காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், குடிசை வீடு எரிந்தது.

திருப்பூர் காங்கயம் ரோடு நாச்சிபாளையத்தில் காலி இடத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபடும் கட்டட தொழிலாளிகள், குடிசை வீடு ஒன்றை அமைத்து வேலை செய்து வந்தனர். கொரோனா காரணமாக, கட்டட தொழிலாளர்கள் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர்.நேற்று மாலை, குடிசை வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, பலத்த சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்து, தீ பிடித்தது. தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

குடிசை வீடு முழுவதும் எரிந்து போனது. தொடர்ந்து, அருகே காய்ந்த புல், செடிகளுக்கு தீ பரவி எரிந்து போனது.விரைவாக தீ அணைத்த காரணத்தால், மற்றொரு சிலிண்டர் வெடிக்கவில்லை. தீ விபத்து குறித்து ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X