பொது செய்தி

தமிழ்நாடு

நம்ம அண்ணாச்சி கடை திறந்துதான் இருக்கும்! முட்டி மோதுபவர்களுக்கு 'கொரோனா' தொற்றும்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நம்ம அண்ணாச்சி கடை திறந்துதான் இருக்கும்!  முட்டி மோதுபவர்களுக்கு 'கொரோனா' தொற்றும்

கோவை : கோவையில், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் நேற்று திறக்கப்பட்டு இருந்தன.

சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திய பின், சில கடை உரிமையாளர்கள் கடையின் முன் 'வட்டமிட்டு' வரிசை ஏற்பாடு செய்தனர்.144 ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வீணாக நெருக்கடியடிப்பதால், வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து, சில கடைகளின் முன், இடைவெளிக்காக வட்டமிடப்பட்டது.வைசியாள் வீதி, சின்னியம்பாளையம், பகுதிகளிலும் மளிகை கடைகள் திறந்திருந்தன.

தியாகி குமரன் மார்க்கெட் காய்கறி கடைகள் நடத்தப்பட்டன.மீன் மார்க்கெட்டில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இனி காலை, 8:00 முதல், 11:00 மணி வரை மட்டுமே, மீன் மார்க்கெட் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், மீன், காய்கறி வாங்க, மார்க்கெட்டுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.ஆவின் பால் கிடைக்கும்கோவையில் வழக்கமாக நாளொன்றுக்கு, 1.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் சப்ளை செய்யப்படும். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பால் சப்ளை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில், 2.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. பால் தட்டுப்பாடின்றி, வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பால் கிடைக்கலையா!ஆவின் பால் கிடைக்காவிட்டால், கிழக்கு மண்டலம் - 94890 43713, மேற்கு மண்டலம் - 94890 43711, வடக்கு மண்டலம் - 98422 44750, தெற்கு மண்டலம் - 96774 94172 ஆகிய எண்களுக்கோ அல்லது விற்பனை மேலாளரை, 94890 43715 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202010:00:05 IST Report Abuse
Ram Pollachi தீபாவளி, பொங்கலுக்கு தென் மாவட்டத்திற்கு சிறப்பு பஸ்கள், இரயில்களை கேட்கும் கூட்டம் இந்த சமூக ஊரடங்கு உத்தரவு சமயத்தில் ஏன் கேட்கவில்லை. உழவர் சந்தைகள், கூட்டுறவு பண்டகசாலைகளை மூடிவிட்டு பழமுதிர் நிலையம் தண்ணாச்சி கடைகளை திறந்து விடுவது ஏன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X