பொது செய்தி

தமிழ்நாடு

அபராத கட்டணமின்றி காப்பீடு தொகை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை ஏப்., 30ம் தேதி வரை அபராத கட்டணமின்றி செலுத்தலாம் என, தபால்துறை அறிவித்துள்ளது.

தபால் துறையில் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 20 ஆயிரம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும், ஊரக ஆயுள் காப்பீடு திட்டத்தில், 20 ஆயிரம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.இதற்காக, 7 ஆண்டு முதல், 25 ஆண்டு வரை பிரீமியம் தொகை தபால் அலுவலகங்களில் செலுத்த வேண்டும். தபால் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.,) திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர், டாக்டர், இன்ஜி., நர்ஸ்கள் மட்டுமே சேர முடியும்.ஊரக ஆயுள் காப்பீடு திட்டத்தில் (ஆர்.பி.எல்.ஐ.,) அனைத்து தரப்பினரும் சேரலாம்

. இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் ஒன்று, மூன்று, ஆறு, 12 மாத தவணை காலங்களாக பிரித்து பிரீமியம் தொகை கட்டி வருகின்றனர். சில சந்தாதாரர்கள் பிரீமிய தொகையை செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு மார்ச் 31க்குள் நிலுவை தொகையை செலுத்த தபால்துறை அறிவித்திருந்தது.தற்போது, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், மக்கள் வெளியே வர முடியாத சூழலில் உள்ளனர். பெரும்பாலான ஏழை மக்களின் வாழ்வாதாரம் இதில் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரீமியம் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை ஏப்., 30 வரை நீட்டித்துள்ளது.மேலும், வாடிக்கையாளர்கள் எந்தவிதஅபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தபால்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X