பொது செய்தி

தமிழ்நாடு

அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : 'அத்தியாவசிய பொருட்களை, தற்போதைய சூழலை பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்றால் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொண்டு, லைசென்ஸ் ரத்து செய்யப்படும்,'' என கலெக்டர் ராஜாமணி எச்சரித்துள்ளார்.

தமிழக அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அத்தியாவசிய தேவையை தவிர, பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இச்சூழலை பயன்படுத்தி, சாதாரண கிருமிநாசினிகளை இரண்டு, மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.காய்கறி, பழங்கள் குழந்தைகளுக்கான டையபர், பால் பவுடர், பெண்களுக்கான நாப்கின் போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வேறு வழியின்றி வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் யாராவது கூடினால், தொற்றுநோய் தடுப்புச்சட்டம், 1987 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசு அறிவுறுத்தலின் படி, பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்றால் ஆய்வு செய்து, தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ், லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.டாஸ்மாக், பார் போன்றவற்றில் விதிமுறை மீறி செயல்பட்டால், 'சீல்' வைக்கப்படும்,'' என எச்சரித்தார்.

'சிக்கல் உள்ளது'கோவை மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், ''அரசு அறிவுறுத்தலின் படி, 100 மில்லி லிட்டர் கிருமிநாசினி 50 ரூபாய்க்கும், 200 மில்லி லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்க, அனைத்து மருந்தகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். கிருமிநாசினி, முகக்கவசம் தட்டுப்பாடு உள்ளது. முககவசம் வெளிமாநிலங்களில், 'ஆர்டர்' செய்துள்ளோம். தற்போது, 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தருவிக்க சிக்கல் உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X