பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்துக்கு 'டிப்போ'வுக்கு பாதுகாப்பு 

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : 'போக்குவரத்து டிப்போவில் நிற்கும் அரசு பஸ்களின் பாதுகாப்புக்கு மூவர் போதும். மற்றவர்கள் பணிக்கு வர வேண்டாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு நாடு முழுவதும் அடுத்த, 21 நாட்களுக்கு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. முந்தைய தினம் மதியம் முதலே பஸ் சேவை குறைக்கப்பட்டதால், நேற்றிரவே திருப்பூர் டிப்போவுக்கு அனைத்து பஸ்களும் வந்து சேர்ந்தது.டிப்போ ஒன்றில், 73 பஸ்களும், இரண்டில், 61 பஸ்களும், டவுன், சர்வீஸ், எக்ஸ்பிரஸ், நான் - ஸ்டாப் என வரிசைப்படுத்தி நிறுத்தப்பட்டது. சென்னை, திருப்பதி செல்ல வேண்டிய எஸ்.இ.டி.சி., பஸ்களும் வந்து சேர்ந்தது.

டிப்போவுக்கு இரவு மற்றும் பகல் நேர வாட்ச்மேன், பஸ்களை கண்காணிக்க ஒரு உதவி பொறியாளர் மட்டும் பணியில் இருந்தால் போதும். மற்ற அலுவலர்கள் பணிக்கு வர வேண்டாம். உயர் அலுவலர்கள் வீட்டில் இருந்து அரசு உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் அழைக்கும் போது, ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X