சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் தப்பித்த கொள்ளையன்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பல்லடம் : வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், வெறுங்கையுடன் பல்லடம் திரும்பினர்.

பல்லடத்தை அடுத்த வே.கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பிப்., 24ல் கொள்ளை நடந்தது.அதில், 246 சவரன் நகை மற்றும் 18.50 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய, அனில்சிங், 38, ராமன்ஜீ அப்பா, 34, ராமகிருஷ்ண ஆச்சாரியா, 32, மற்றும் இஷார்கான், 34 ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து, 85 சவரன் நகைகள், 50 கிராம் தங்க கட்டி, 12.62 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 600 கிராம் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு கொள்ளையன் கஜராஜை தேடி, தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் முகாமிட்டனர்.மூன்று முறை நெருங்கியும், அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, ராஜஸ்தானிலும் போக்குவரத்துகள் முடங்கியுள்ளன.இதனால், கொள்ளையனை பிடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதனால், தனிப்படை போலீசார், பல்லடம் திரும்பினர். நேற்று முன்தினம், வந்த தனிப்படை போலீசாருக்கு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் பணிக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X