சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இல்லாதவரை தேடி சென்று உணவு கொடுங்க!' காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பல்லடம் : 'இல்லாதவர்களை தேடி சென்று உணவு வழங்க வேண்டும்,' என காமாட்சிபுரிஆதீனம் அறிவுறுத்தினார்.

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், அமாவாசை வழிபாடு நடந்தது. 'கொரோனா' வைரஸ் தாக்கத்தை ஒழிக்கும் பிரார்த்தனையாக, மகா ம்ருத்தியுஞ்ஜய யாகம் நடந்தது.யாகத்தை நடத்தி வைத்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி பேசியதாவது:உணவே மருந்தாக கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். மனிதர்களுக்கு சுற்றுப்புற துாய்மையை காட்டிலும் உள் துாய்மை மிக முக்கியமானது. அதற்காக, நம் முன்னோர்கள் வழிகாட்டிய துாதுவளை, ஆடாதோடை, ஆவாரை, வேப்பிலை, திப்பிலி, மிளகு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை கொண்டு, கஷாயம் தயாரித்து அருந்துவது நல்லது.

அதனால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக, நாமும் பாடுபடவேண் டும். ஜீவாதாரமே பாதிக்கப்பட்ட பலர், உணவு உண்ணவும் வழியின்றி தவித்து வருகின்றனர். அது போன்றவர்களுக்கு, உணவை தேடிச்சென்று வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, பல்வேறு மூலிகைகள் கொண்ட கஷாய பொடியை, பக்தர்களுக்கு அவர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X