சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏப்., 1 முதல் ரேஷனில் இலவச பொருள் ; வீடு, வீடாக டோக்கன் வழங்க உத்தரவு

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை, : வரும் ஏப்., 1 முதல், ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி, பருப்பு, ஆயில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்காக, வரும், 31ம் தேதிக்குள் வீடு வீடாகச் சென்று, டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில், 1,400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கின்றன. 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய பணி என்பதால், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏப்., மாதத்துக்கான ஒதுக்கீட்டில், அரிசி, பருப்பு, ஆயில் ஆகியவை இலவசமாகவும், இதர செலவினங்களுக்காக, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு கடையிலும், நாளொன்றுக்கு, 100 கார்டுதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க வேண்டும்.

இப்பணியை, ஏப்., 1ல் துவக்க வேண்டும். அதற்காக, வரும், 31க்குள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க வேண்டும்.பொருள் வழங்கும் நாள், வரிசை எண், நேரம் குறிப்பிட வேண்டும். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, 50 குடும்பத்துக்கும், மதியம், 2:00 முதல், மாலை, 6:00 மணி வரை, 50 குடும்பத்துக்கும், வழங்க வேண்டும்.பொருட்கள் வழங்கும்போது, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, கார்டுதாரர்கள் ஒவ்வொருவரையும் நிறுத்த வேண்டும். கூட்டம் சேர்க்கக்கூடாது.

விற்பனையாளர்கள் கையுறை, சானிட்டைசர் வைத்திருக்க வேண்டும்.பொருள் வழங்கப்படும் நாள்/ தெரு விவரங்களை ரேஷன் கடை அறிவிப்பு பலகையில், எழுதி வைத்திருக்க வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின், கோவை மண்டல இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். எங்களுக்கு என்ன பாதுகாப்பு?ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக கவசம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள், பொருட்கள் வாங்க வரும்போது, கை கழுவதற்கும், சோப்பு அல்லது கிருமி நாசினி திரவம் வழங்கப்படவில்லை. பொருட்கள் அளவை செய்வதற்கும், உதவியாளர் இல்லை. ஒரே ஊழியரே அனைத்து வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது. 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் ஊழியர்கள் மட்டும், வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க வேண்டும் என கூறுகின்றனர். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202010:12:21 IST Report Abuse
Ram Pollachi டோக்கன் தருவதை கவுன்சிலர்கள் பார்த்துக்கொள்வார்கள்! நீங்கள் வழக்கம் போல் எடையை சரியா போடுங்கள் அதுபோதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X