சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போத்தனுார், மதுக்கரையில் 10 தனிமைப்படுத்திய வீடுகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

போத்தனுார். : போத்தனுார் மற்றும் மதுக்கரை வட்டார பகுதிகளில், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, 12 ஆக உயர்ந்தது.வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

வீடுகளுக்கு திரும்பிய பிறகும், 14 நாட்கள் வரை இது தொடர்கிறது.ஏனெனில் ஒருசிலருக்கு துவக்கத்தில், வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிவதில்லை. நாட்கள் கடந்த பின், அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். அதற்குள்ளாக அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி, வெளி இடங்களுக்கு சென்று வருகின்றனர். பலருக்கும் தங்களை அறியாமலே பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.இத்தகையோரின் வீடுகளின் அருகே வசிப்போர், இதனால் பெரும் பீதியடைகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, பொது சுகாதார துறையினர் இவர்களின் வீடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில் இருநாட்களில் குறிச்சி ஹவுசிங் யூனிட், கோவைபுதூர். பி.கே.புதூர், குனியமுத்தூர், போத்தனூர் சாரதா மில் ரோடு, செங்கோட்டையா காலனி, மதுக்கரை வட்டாரத்தில் ஐந்து என மொத்தம், 12 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.வீடுகளின் முன் பெயர் மற்றும் நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X