சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,476 மாணவர்களுக்கு மறு வாய்ப்பு!

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 வேதியியல் கணக்கு பதிவியல், புவியியல் தேர்வில் பங்கேற்காத, 1476 பேருக்கு தேர்வெழுத மறுவாய்ப்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ், ஊரடங்கு, 144 தடை உத்தரவு என ஏகப்பட்ட பீதிக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது.இறுதி தேர்வன்று குறைவான பஸ் வசதிகள் இருந்ததாலும், பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றதாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வழக்கத்தை விட அதிகம் மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் வேதியியல் தேர்வில் - 442 பேரும், கணக்கு பதிவியல் தேர்வை - 783 பேரும், புவியியல் தேர்வை - 42 பேரும் எழுதவில்லை.

அதேபோல், தனித்தேர்வர்களில், வேதியியல் - 9, கணக்குபதிவியல் - 48 பேரும் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என முதல்வர் நேற்று அறிவித்ததால், மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X