பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா...வீட்டுல பத்திரமா இருங்க! 80 சதவீத காப்பக குழந்தைகளுக்கு வீட்டு பாதுகாப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காப்பகங்களிலுள்ள, 80 சதவீத குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ், இரண்டு அரசு காப்பகங்கள் உட்பட, 54 தொண்டு நிறுவனங்களின் ஆதரவற்ற குழந்தை காப்பகங்கள் செயல்படுகின்றன. இங்கு, ஆயிரத்து 757 குழந்தைகள் தங்கி, கல்வி பயில்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, காப்பகங்களிலுள்ள, 80 சதவீத குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர் சுந்தர் கூறியதாவது:பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் காப்பாளர் இல்லாத குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகள், தங்கள் வீடுகளுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

தற்போது வரை, ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதுமுள்ள, 56 காப்பகங்களின் நிர்வாகிகள், 500 பணியாளர்கள், குழந்தைகள் அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய, சோப்பு மற்றும் கிருமிநாசினிகளை வளாகத்தில் ரெடியாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எந்த காரணத்துக்காகவும் குழந்தைகளைகூட்டமாக ஒன்றிணைக்க கூடாது.

குழந்தைகள் தங்களுக்குள், ஒரு மீட்டர் இடைவெளியை பின் பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த, காப்பகங்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X