சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' முன்னெச்சரிக்கை 66 துணை தபால்நிலையம் மூடல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் 66 துணை தபால்நிலையங்களை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட, கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், கோவை முழுவதும் செயல்படும், 66 துணை தபால்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.இந்த வாடிக்கையாளர்கள், அருகிலுள்ள எந்த தபால்நிலையத்திலும் சேவைகளை பெறலாம். கூட்செட் ரோடு மற்றும் ஆர்.எஸ்.புரம்., தலைமை தபால்நிலையங்கள் வழக்கம் போல செயல்படும்.பொதுமக்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா மிஷன், போத்தனுார், மதுக்கரை, என்.ஜி.ஜி.ஓ., காலனி, ராமகிருஷ்ணா வித்யாலயம், ரெட்பீல்ட்ஸ், கணபதி, ஒண்டிப்புதுார், கலெக்டர் அலுவலகம், கோர்ட் வளாகம், பஜார் பகுதிகளில் செயல்படும் 13 துணை தபால்நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்.

கிராம பகுதிகளில் செயல்படும், 96 கிளை தபால்நிலையங்களும் செயல்படும். அனைத்து தபால் ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் நிரப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் முககவசம், கையுறை என போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X