பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் 'கொரோனா' தடுப்பு கண்காணிப்பு குழு

Added : மார் 26, 2020
Share
Advertisement

அவிநாசி : 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சிகள் அளவில் வருவாய்த்துறை மற்றும் பொது சுகாதார பிரிவினரை உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டுள்ளது.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில், மாவட்ட வாரியாக, ஒவ்வொரு தாலுகா, வட்டார அளவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.அதன்படி, வெளிநாடு, பிற மாநிலம் சென்று திரும்பியவர்களை, அடையாளம் கண்டு, அவர்களை அவர்களது இருப்பிடங்களிலேயே, தனிமைப்படுத்தி கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தாலுகா அளவிலும், நான்கு, ஐந்து ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிக்கு, நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர், வெளிநாடு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தி வைப்பதுடன், அவர்கள் பொது இடங்களில் நடமாடாமல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினமும் காலை, 9:00 மணிக்கு, அவர்களது நிலையை, இ--மெயில் மூலம், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X