பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வு 1,691 பேருக்கு கிடைத்தது வாய்ப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த, இறுதி பொதுத்தேர்வை, ஆயிரத்து 691 பேர் எழுதாததால், மீண்டும் இத்தேர்வில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில், 356 பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் (மார்ச் 24 ம் தேதி) பொதுத்தேர்வு நடந்தது.இயற்பியல், புவியியல், கணக்கியல் என மூன்று பாடங்களுக்கான தேர்வுகளில்,32 ஆயிரத்து 253 பேர் பங்கேற்றனர்.ஆயிரத்து 691 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.மாநிலம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும், இம்மாணவர்கள் தேர்வு எழுத வர முடியவில்லை என்ற புகார் எழுந்தது.இதைத்தொடர்ந்து, இறுதித்தேர்வு மட்டும் எழுதாத மாணவர்களுக்காக மீண்டும், இத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், கோவையில் தேர்வு எழுத வருகைப்புரியாத 1,691 பேருக்கு, மீண்டும் பொதுத்தேர்வு எழுதும்வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராக, போதிய அவகாசம் இருப்பதால், வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X