பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு சென்று திரும்பிய 2 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : வெளிநாடு திரும்பிய இருவர், திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 'கொரோனா' தொற்று சந்தேகத்தின் பேரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரத்தமாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.'கொரோனா' தொற்று சந்தேகத்தால், வெளிநாட்டில் இருந்து, திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் இருப்பின், அவர்கள் தாங்களாகவே முன்வந்து பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.அதன்பேரில், சுகாதாரத்துறையால், 22 பேர் வீட்டு கண்காணிப்பில் இருந்த நிலையில், 97 ஆக எண்ணிக்கை உயர்ந்தது. இவர்களது கையில், குறிப்பிட்ட தேதியை கணக்கிட்டு, வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய முத்திரை, 'சீல்' குத்தப்பட்டது.

''கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் என்னை நான் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வேன். தன் சுத்தத்தை பேணி காப்பேன்; ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள டாக்டரை அணுகுவேன், சமுதாய நலன் கருதி இதை நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன்' என்று குறிப்பிடப்பட்ட உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது.இந்நிலையில், மேலும், இருவர், திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 'கொரோனா' தொற்று சந்தேகத்தில், பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தினர். அவர்களது ரத்த மாதிரி, பரிசோதனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.டாக்டர்கள் கூறுகையில்,

'இதுநாள் வரை வெளிநாடு சென்று திரும்பியவர்கள், அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் தகவல் தெரிவிக்காமல் சிகிச்சை பெற முற்பட்டனர்.ஆனால், அரசின் எச்சரிக்கைக்கு பின்பே, தாமாக முன்வந்து, அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வருகின்றனர். விபரங்களுக்கு 0421 2971199 மற்றும் 1077 என்ற எண் ணில் அழைக்கலாம். பொதுமக்கள் இந்நடவடிக்கை முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X