பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 6 முறை சுத்தம் செய்யணும் ; கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : 'கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கடைக்காரர்கள் அனைவரும், தினமும் கடையை 6 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

அது பற்றிய பதிவேடு பராமரிக்க வேண்டும்' என்று உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தீவிரம் அடைந்துள்ளன. ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.எனினும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பால் பூத்துகள், கறிக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு திறக்கப்பட்டுள்ள கடைகளில், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:n அரசு உத்தரவுபடி, காய்கறி, பழங்கள், மளிகை கடைகள், பால் பூத், கறிக்கடை திறந்திருக்கலாம். இந்த கடைகளின் உரிமையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் வந்தவுடனே, கை கழுவ சானிட்டைசர் தர வேண்டும்.n அதன்பிறகே பொருள் வாங்க உள்ளே அனுமதிக்க வேண்டும். இதற்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்.n கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு, வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். இந்த விஷயத்தில் கடைக்காரர்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
முதலில் வந்த, 10 பேர் பொருள் வாங்கி விட்டு வெளியேறியபிறகு தான், அவர்களுக்கு பின் வரிசையில் நிற்பவர்களை, உள்ளே அனுமதிக்க வேண்டும்.n வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று தவிர்ப்பது பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிக்க வேண்டும்.n கடைக்காரர்கள் தினமும் கடையை, கிருமி நாசினி கொண்டு ஆறு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்தவர் கையொப்பத்துடன் பதிவேடு, சார்ட் பராமரிக்க வேண்டும். ஆய்வின் போது காண்பிக்க வேண்டும்.

கடையில், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கை வைக்கும் அனைத்து இடங்களும், குறிப்பாக, கைப்பிடி, கதவு, டேபிள் ஆகியவை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு கடையை பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் கடையில் நெரிசல் கூடாது.இவ்வாறு, டாக்டர் தமிழ்செல்வன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X