பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' விரட்ட வீடுகளில் மஞ்சள், வேப்பிலை தண்ணீர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவை பீளமேடு, ராமநாதபுரம், கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் வீட்டு வாசல்களில் மஞ்சள் நீரில், வேப்பிலை கலந்து வைத்துள்ளனர்.

வேப்பிலை மற்றும் மஞ்சள், பாரம்பரியமாக நம் வீடுகளில், கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கொடிய நோய் தாக்கத்தின் போது, வீடுகளில் வேப்பிலை கட்டுவதையும், மஞ்சள் கலந்த நீரில் குளிப்பதையும், வழக்கமாகவே கொண்டுள்ளோம். தற்போது, கொரோனா பீதி காரணமாக, நகர் பகுதிகளில் பல வீடுகளின் முன்பு, வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. குடங்களில், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கலந்து, வாசல் நடுவே வைத்து மறந்துபோன பழக்கங்களை மீட்டெடுத்துள்ளனர். பீளமேடு பகுதியை சேர்ந்த சுமதியிடம் கேட்டபோது, ''இது நம் பாரம்பரிய பழக்கம். மஞ்சள் மற்றும் வேப்பிலையை தண்ணீரில் கலந்து, இரண்டு வாசல்களிலும் வைத்துள்ளோம். இதிலிருந்து காற்றின் மூலம் பரவும் வாசம், கிருமிகளை அண்ட விடாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X