பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து 'எஸ்கேப்'

Added : மார் 26, 2020
Share
Advertisement

அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கருவலுாரில் வசிப்பவர் பரமசிவம்,60. இவர், உள்ளூரில் நடக்கும் வாரசந்தைகளுக்குச் சென்று, பழ வியாபாரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில், அவருக்கு சளி, இருமல் ஏற்பட்டுள்ளது.தொடர் சிகிச்சை பெறாமல் மருத்துவமனையிலிருந்து டாக்டர்களுக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அவருக்கு, சளி, இருமல் அதிகமான நிலையில், அவரது குடும்பத்தினர், கொரோனா வைரஸ் தாக்கி இருக்கக்கூடும் என்ற அச்சத்தில், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அங்கு சென்று பார்த்தபோது, அவருக்கு சளி, இருமல் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அவர்கள், ஆம்புலன்சில் அவரை ஏற்ற மறுத்து, திருப்பூர் பொது சுகாதார பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். கருவலுார் வி.ஏ.ஒ., உமேஷ் விசாரித்தார்.திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரப் பிரிவினர் பரமசிவத்தை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர்.அவருக்கு தொற்று எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X