சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரம் இல்லாததால் மீன் கடை பாதியில் மூடல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : வெளிமாநில வரத்து அடியோடு தடைபட்டதால், மீன் மார்க்கெட் இரண்டு மணி நேரத்தில் மூடப்பட்டது.திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக, 15 டன் மீன்கள் வரும். நேற்று இரண்டு டன் மீன் மட்டுமே வந்தது. காலை, 5:00 துவங்கி இரவு, 7:00 மணி வரை நடக்கும் மீன் மார்க்கெட், நேற்று இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது.ஆந்திரா, கேரளா கடலோர எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநில மீன் வரத்து இல்லை. துாத்துக்குடி, நாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு டன் மீன்கள் மட்டுமே வந்தன. இருப்பினும், சொற்ப அளவிலான வியாபாரிகள் மட்டுமே வந்ததால், விற்பனை பிசுபிசுத்தது. இதனால், மீன்கள் விற்பனை செய்யப்படாமலேயே கடைகள் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X