சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூ மார்க்கெட் மூடல் தொழிலாளர்கள் அவதி 

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : பகுதி நேரமாக செயல்பட்டு வந்த திருப்பூர் பூ மார்க்கெட் நேற்று முழு அளவில் மூடப்பட்டது.

ஒரே நாளில், 18 லட்சம் இழப்பு ஏற்பட்டது.கடந்த, 22ம் தேதி காலை, 5:00 மணி முதல் சுயஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. அதற்கு முன் வந்த பூக்களை கொண்டு அதிகாலையில், 2 மணி நேரம் பூ மார்க்கெட் செயல்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.இதனால், வெளியிடங்களில் இருந்து பூக்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை. திருப்பூரில் பூ வியாபாரிகள், 150 பேர், பூ கட்டும் பணியில், 300 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமாக பூ மார்க்கெட்டுக்கு, ஏழு டன் பூக்கள் வரும். 90 கடைகளில் விற்கப்படும். கடை ஒன்றுக்கு, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரக்கு ரூபாய்க்கு விற்பனை நடக்கும். நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், 18 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.வியாபாரிகள் கூறுகையில்,'இருபது நாட்களுக்கு இதே நிலை தான். பூக்களை செடிகளில் விட முடியாது. பறித்து பயன்படுத்தவும் முடியாது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X