பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா; 'நீட்' தேர்வு என்னவாகும்; மாணவர்கள் எதிர்பார்ப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : இளநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு தள்ளிப் போகும் என்று ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், 'நீட்' நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். மே 3ம் தேதி தேர்வு என தேசிய தேர்வு முகமை என்.டி.ஏ., அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருந்த, பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அவற்றில் முன்பணம் செலுத்தி பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்திருந்த பெற்றோர், மாணவ, மாணவியர், பெரும் குழப்பத்தில் உள்ளனர்.நீட் பயிற்சியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில், கொரோனா பிரச்னை வந்து விட்டதால், மாணவ, மாணவியரும், பெற்றோரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மாணவர்களுக்கு உதவ, ஒரு சில பயிற்சி நிறுவனங்கள், ஆன்லைன் முறையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளன. ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சிறப்பு பயிற்சி பெற வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.தமிழக அரசு நடத்த முடிவு செய்திருந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள், இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீட் தேர்வு தள்ளிப்போகும் என்று ஆசிரியர்களும், பயிற்சி மைய நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு ஒத்தி வைப்புக்கான அறிவிப்பையும், உடனடியாக வெளியிட வேண்டும் என, மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X