சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூரில், துாய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. \

இந்தியாவில், 21 நாட்களுக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனைகள், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.இதற்கான பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இவர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கும், சானிடைசர்கள், முக கவசம், பூட்ஸ், கிளவுஸ் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.துாய்மை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா தொற்றுநோய் உள்ளபோதிலும், இந்தத் தொழிலாளர்களுக்கு முகமூடி, கையுறை, சீருடை, காலணிகள் மற்றும் சோப்பு அல்லது சுத்திகரிப்பான் வழங்கப்படவில்லை.இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்படாவிட்டால் அவர்களால் தங்கள் வேலையை செய்யமுடியாது. அசாதாரண சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான மருத்துவப் பரிசோதனையும் அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X