பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்புக்கு வீட்டிலிருந்தே படிக்கலாம்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை, : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து, வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடம் படிக்கவும், ஆன்லைன் மூலம், மாதிரி தேர்வு எழுதவும், பலவிதமான வழிமுறைகள்இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி துவங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.மற்ற வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதித்தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மட்டும், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை சூழலை, மாணவர்களுக்கு வீடுகளில் ஏற்படுத்தி தருவது இயலாதது. ஆனால், அவர்களின் கவனம் சிதறாத வகையில், வீட்டிலிருந்த படியே படிக்கவும், மாதிரி தேர்வுகளில் பங்கேற்கவும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலான ஆசிரியர்கள், வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். இதில், தேர்வு வரை படிக்க வேண்டிய, பாடங்கள் குறித்து, அட்டவணை தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்.பாட வாரியாக, நேரம் குறிப்பிட்டுபடிக்குமாறு, வாட்ஸ் ஆப் குழுக்களில் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, பல்வேறு கல்வி இணையதளங்களும், செயலிகளும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.இலுப்பப்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத்குமார் கூறியதாவது:புதிய பாடத்திட்டத்தில், க்யூ.ஆர்., கோடு உள்ளது. இதை ஸ்கேன் செய்து படிக்கும் முறை, மாணவர்களுக்கு சொல்லி தரப்பட்டுள்ளது.இதுதவிர, படிக்கும் போதே, 'தீக் ஷா' செயலியில், பாட வினாக்கள் சார்ந்த வீடியோக்களை பார்வையிடலாம். பார்த்தல், கேட்டல் மூலம் படித்ததை நினைவுப்படுத்தி கொள்ளலாம்.TNTP (Tamilnadu Teachers Platform) என்ற செயலியில், மாணவர்களின் அடையாள அட்டையில் உள்ள எண்களே, பயனர் எண் மற்றும் பாஸ்வேர்டாக உள்ளீடு செய்து, படிக்க தேவையான பாடத்திட்டங்களை பெறலாம். இதில், மாதிரி தேர்வு எழுதவும் வசதி உள்ளது.'நம்ம கல்வி' என்ற செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கியும், தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபடலாம்.TN Schools என்ற இணையதளமும், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பத்தாம் வகுப்புக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்கள், பாடத்திட்ட வீடியோக்கள், மாதிரி வினாத்தாள்கள் இருப்பதால், வீட்டிலிருந்து படிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X