சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு அடைக்கலம் நேசக்கரம் நீட்டிய அமைப்பினர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

பொது இடங்களில் தேவையின்றி கூடுதல் மற்றும் நடமாடுதலைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்து அதை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.திருப்பூர் நகரை பொறுத்த வரை பல்வேறு பகுதிகளில் ரோடுகளில் ஆதரவற்ற நிலையில் பலரும் காணப்படுகின்றனர். கடைகள் மற்றும் வீடுகளில் சென்று தர்மம் பெற்றும், ரோட்டில் செல்வோர் தருவதை சாப்பிட்டு வந்தனர்.ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் நிலை கேள்விக்குறியானது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா தலைமையிலான குழுவினர், நபர்களை தேடிப்பிடித்தனர். அவர்கள் அனைவரும் காலேஜ் ரோடு சந்திரகாவி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். ரோட்டரி மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பினர், உணவு வழங்கும் பொறுப்பை ஏற்று கொண்டனர். இதேபோல், ஈஸ்வரன் கோவில், வளர்மதி உள்ளிட்ட இடங்களில் ரோட்டோரம் இருந்த,45 பேரை, சமூக நலத்துறையினர் மற்றும் அனைத்து ரோட்டரி கிளப்பினர் மீட்டனர்.

அவர்களை, திருப்பூர் மாநகராட்சி பழனியம்மாள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். த.மு.மு.க.,வினர், அவர்களுக்கு தேவையான உணவு, வாட்டர் பாட்டிலை வழங்கினர். ரோட்டரி கிளப்பினர், பெட்ஷிட், பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X