பொது செய்தி

தமிழ்நாடு

பாஸ்போர்ட் அலுவலகம் வாயிலாக பட்டியல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : பாஸ்போர்ட் அலுவலகம் வாயிலாக வெளிநாடு திரும்பியவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்கள் பயண விபரங்களை அரசிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வந்த வர்கள் மூலம் 'கொரோனா' பரவி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு சென்றவர்கள் பட்டியலை எடுக்கும் படியும், அவர்களை கண்காணிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அதன்படி, பாஸ்போர்ட் அலுவலகங்கள் வாயிலாக, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அதில், சிலர் அரசு உத்தரவை மீறி, விவரம் தெரிவிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.சுய விவரங்கள் தெரிவிக்காமல் இருந்தவர்கள், தனியார் டாக்டர்களிடம் லேசான காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சையும் பெற்றுள்ளனர். தற்போது, 144 தடை உத்தரவால், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போர் எண்ணிக்கை உயரும் என்பதால், அதற்கு ஏற்ப, திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர்கள் 'அலர்ட்' ஆகி உள்ளனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தங்கள் சுய விவரங்களை போலீசில் தெரிவிக்க வேண்டும், வீடுகளில் சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில், அரசுஉத்தரவை மீறி, சுயவிவரம் தெரிவிக்காமல் உள்ளனர்.வெளிநாட்டில் இருந்து, விமான நிலையம் திரும்பிய போதே, அவர்களின் கைகளில் முத்திரை பதிக்கப்பட்டிருந்தால், கொரோனா தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X