பொது செய்தி

தமிழ்நாடு

'வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் ; அமைச்சர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்பூர் : 'பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்; அவசியமில்லாமல் சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,' என, அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பூர் மாவட்ட அளவிலான, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த கூட்டத்தில், போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், எஸ்.பி., திஷாமிட்டல், டி.ஆர்.ஓ., சுகுமார், எம்.எல்.ஏ.,கள் குணசேகரன், நடராஜன், விஜயகுமார், தனியரசு, காளிமுத்து ஆகியோர் பாதுகாப்பு பணி குறித்து பேசினர்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில், பிரதமர், முதல்வரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில், சுகாதார பணிகளை கவனிக்க, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 1 க்குபிறகு, வெளிநாடுகளில் இருந்து வந்த, 172 பேர், கண்டறியப்பட்டு, வீடுகளை கண்காணித்து வருகிறோம்.கட்டுப்பாட்டு அறைஅவர்கள் நன்றாக இருந்தாலும், கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்கிறது. அவரகால மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்குகிறது. மாவட்ட மக்கள், 1077, 0421 2971199, 2971133 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, தகவல்களை பெறலாம்மருத்துவத்துறையினரும், வருவாய்த்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. இதேபோல், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, 100 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

மாவட்ட மக்கள் பாதுகாப்புக்காக, வருவாய்த்துறை, போலீஸ், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை தயாராக இருக்கிறது.41 'செக்போஸ்ட்'தடையுத்தரவு அமலில் இருப்பதால், மாநகராட்சி எல்லையில், 10 இடங்கள்; புறநகரில், 31 என, 41 இடங்களில், 'செக்போஸ்ட்' அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டினர், வெளிமாநில மக்கள் திருப்பூரில் வசிக்கின்றனர்.பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்களில் கணக்கெடுப்பு நடத்தி, வெளிமாநில தொழிலாளர் விவரம் கண்டறியப்படும்.

பிறகு, ஒவ்வொரு நிறுவனத்திலும், மருத்துவ முகாம் நடத்தப்படும்.பாதுகாப்பு பணியில், 615 பேர்திருப்பூர் மாவட்டத்தில், 615 போலீசார், சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில், முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், முதலில் தங்களது ஆரோக்யத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மிகவும் கவனமாக இருந்து, சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி பணியாளர்கள், கட்டாயம், முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

'டூ வீலரில்' சுற்றாதீங்க!பொதுமக்கள், அத்யாவசிய தேவைகள் நீங்கலாக, வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். 'டூ வீலர்' மற்றும் கார்களில், தேவையில்லாமல் சுற்றக்கூடாது; அவ்வாறு சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X