பொது செய்தி

இந்தியா

கோவில் பணிகள் துவக்கம்; புதிய இடத்தில் ராமர் சிலை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
ayodhya,RamMandir,yogi,RamLalla,idol,UP,அயோத்தி,ராமர்,கோவில்,யோகி

அயோத்தி: அயோத்தியில், கோவில் கட்டுமான பணிகள் துவங்குவதை முன்னிட்டு, ராமர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது.


வழிபாடு:


உ.பி.,யில், உள்ள அயோத்தியில், புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலை, அருகில் உள்ள பகுதிக்கு மாற்றும் நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது. ராமஜென்மபூமி கோவில் கருவறையில் இருந்து, 27 ஆண்டுகளுக்குப் பின், ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்நிகழ்ச்சி யில், முதல்வர், யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலர், சம்பத் ராய் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்றனர். தற்போதைய கோவிலில் இருந்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நால்வர், ராமர் சிலையை பல்லக்கில் சுமந்து சென்று, புதிய இடத்தில், 9.5 கிலோ எடையுள்ள, வெள்ளி சிம்மாசனத்தில் வைத்தனர். பின், முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.


latest tamil news




நன்கொடை:


பின், ராமர் கோவில் கட்டுவதற்கு, ஆதித்யநாத் தன் சொந்தப் பணத்தில் இருந்து, 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
27-மார்-202009:35:08 IST Report Abuse
hasan மனிதர்களுக்கு தான் ஊரடங்கு ,
Rate this:
Cancel
sivam - up,இந்தியா
26-மார்-202016:41:13 IST Report Abuse
sivam வெறி புடிச்சு தான் aalaiyuraangha
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மார்-202014:05:32 IST Report Abuse
Ab Cd இந்த 21 நாட்களில் என்னென்ன அத்துமீறல்கள் நடந்து கொண்டு இருக்கிறதோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X