பொது செய்தி

தமிழ்நாடு

நிஜ ஹீரோக்கள் 'பேப்பர் பாய்'களுக்கு சல்யூட்!

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
ஒவ்வொரு பொழுது விடியும்போதும், அன்றாட உலக நடப்புகளை உங்கள் வீட்டு வாசல் கதவுகளுக்கு அருகில் கொண்டு வைத்து வைக்கும், 'பேப்பர் பாய்'கள் தான், தற்போதைய நிஜ ஹீரோக்கள். உடலை உறைய வைக்கும் குளிர், கொட்டும் மழை என, எந்தவிதமான வானிலையிலும், கடமையை விட்டுக் கொடுக்காதவர்கள் இவர்கள். ஒவ்வொரு காலையிலும், நாளிதழ்கள் இல்லாமல் நீங்கள் பருகும் டீயும், காபியும் ருசிக்கவே
paper_boy,real_heros,salute

ஒவ்வொரு பொழுது விடியும்போதும், அன்றாட உலக நடப்புகளை உங்கள் வீட்டு வாசல் கதவுகளுக்கு அருகில் கொண்டு வைத்து வைக்கும், 'பேப்பர் பாய்'கள் தான், தற்போதைய நிஜ ஹீரோக்கள். உடலை உறைய வைக்கும் குளிர், கொட்டும் மழை என, எந்தவிதமான வானிலையிலும், கடமையை விட்டுக் கொடுக்காதவர்கள் இவர்கள். ஒவ்வொரு காலையிலும், நாளிதழ்கள் இல்லாமல் நீங்கள் பருகும் டீயும், காபியும் ருசிக்கவே ருசிக்காது. நாளிதழ்கள் இல்லாத விடியல், ஒருவித வெறுமையை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது; அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனாலும், பேப்பர் பாய், நாளிதழ் ஏஜன்டுகளைப் பற்றி, ஒரு நிமிடம் கூட, நாம் யோசித்து பார்த்திருக்க மாட்டோம். கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, நாம், வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த அபாயமான நேரத்தில் கூட, போர் வீரர்களைப் போல், துணிச்சலாக கடமையாற்றுபவர்கள், பேப்பர் பாய்கள் தான். சமூக வலைதளங்கள் மூலம், உடனுக்குடன், நம் அலைபேசிகளில் தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அது, நம்பகத் தன்மை உடைய தகவல்களா என்ற சந்தேகத்துக்கு விடையளிக்க யாரும் இல்லை.

ஆனால், தற்போதைய சூழலில் மட்டுமல்லாமல், எப்போதுமே நாளிதழ்கள், நம்பகத்தன்மை உள்ள தகவல்களை தரத் தவறியது இல்லை. இதில், பலரது உழைப்பு உள்ளது. இதில், பேப்பர் பாய், ஏஜன்டுகளின் உழைப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாளிதழ்கள் டெலிவரி செய்வோர் மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை டெலிவரி செய்வோர் அனைவருமே, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்படுவது தான் துரதிர்ஷ்டம்.


latest tamil news



நாட்டில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பேப்பர் பாய்களுடன் பேசிப் பார்த்தால் தான், ஒவ்வொரு நாளும், அவர்கள் எவ்வளவு கடினமான சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியும். கொரோனா பீதி நிலவும் சூழலில், நாளிதழ்கள் அச்சிடுவது, அவற்றை பார்சல் செய்வது உள்ளிட்ட பணிகள், மனித தொடர்பு இல்லாமல் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப் படுவதையும், அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதையும், 'வீடியோ'க்களாகவும், செய்திகளாகவும் நம் நாளிதழ் உட்பட பலவற்றில் வெளிவந்துள்ளது.

நாளிதழ் டெலிவரி செய்வோரும், போதிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர். எனவே, நாம் சரியாக பார்த்திராத, கவனித்திராத பேப்பர் பாய்கள், தற்போது நிஜ ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களுக்கு, 'சல்யூட்' அடிப்பதற்கு, இதுவே சரியான நேரம்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - kailasa,இந்தியா
26-மார்-202013:25:27 IST Report Abuse
Tamilan பேப்பர் மூலமாகவும் கொரோனா பரவும் ....எனவே அதையும் தவிர்க்கவேண்டும் ...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மார்-202012:47:02 IST Report Abuse
Bhaskaran உண்மையில் உண்மையின் உரைகல் நம் நாளிதழ் மட்டுமே மக்களை பீதியடைய செய்யாமல் அதேசமயம் அவர்களை வெகு கவனத்துடன் இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க அறிவுறுத்தும் உங்களை எவ்வளவுபாராட்டினாலும் தகும் .முகவர்கள் டெலிவரி ஆட்கள் ஆகியோருக்கு நன்றியுடன் கூடிய வணக்கங்கள்
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
26-மார்-202012:12:28 IST Report Abuse
Rahim Gani ? எப்டிலாம் ஆதரவு தேடுறாங்க யப்பா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X