பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (202)
Share
Advertisement
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்

சென்னை: 'தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்க, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, கலெக்டர்களுடன், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். வங்கிகளில் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை வசூலை, வங்கிகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.


latest tamil newsதனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு சிறப்பு ஊதியமாக, 5,000 ரூபாய் வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (202)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
31-மார்-202014:02:37 IST Report Abuse
S.Ganesan ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ள மூன்று மாத கடன் ஒத்திவைப்பு, எம் .பி.கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுப்பது போன்றவற்றை திரும்பவும் சொல்லி என்னவோ தான்தான் இதெற்கெல்லாம் ஏற்பாடு செய்த மாதிரி ஸீன் போட முயல்கிறார். தன் சார்பாகவும், தங்கள் கட்சி சார்பாகவும் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. விழுப்புரத்தில் இருக்கும் மண்டபத்தை கொடுக்கிறாராம். இப்போது எவன் கல்யாணம் பண்ண போகிறான் . செலவு செய்யாமல் வெறும் வாய்பந்தலிலே ஆதாயம் தேடுபவர்
Rate this:
Cancel
subraj - Madurai,இந்தியா
31-மார்-202013:48:55 IST Report Abuse
subraj மறுபடியும் மொத இருந்தா? முடியலடா சாமீ.....
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
31-மார்-202010:45:12 IST Report Abuse
T.S.SUDARSAN I think stalin can give Rs 5000/- as advance for getting vote from the public so that it will be useful for getting CM seat.PK team can suggest this as a token advance for the election to vote in future.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X