பொது செய்தி

தமிழ்நாடு

11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Petrol,diesel,price

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 11வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது. இருப்பினும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படவில்லை.


latest tamil news



தமிழகத்தில், இம்மாதம், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 11வது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யபடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202009:23:23 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல் போட வண்டியில் போனாலும் அடிய்ச்சு நொறுக்குறாய்ங்க. இப்பிடியே போனா, எப்பிடி எக்கச்சக்க விலைக்கு பெட்ரோல் வித்து, பொருளாதாரத்தை 5 டிரில்லியனாக ஒசத்துவது? சிந்தியுங்க.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
26-மார்-202007:34:47 IST Report Abuse
R.Kumaresan தேர்தல்னாலே அல்வா சாப்பிடற மாதிரி பெட்ரோல் விலையேற்றம் செஞ்சிருந்தாலும் மறந்திடுவார்கள்.. R.Kumaresan. டெல்லி தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.. R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X