பொது செய்தி

இந்தியா

கொரோனாவை தடுப்பது எப்படி: 'ஜி-20' தலைவர்கள் இன்று ஆலோசனை

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி :'கொரோனா' வைரஸ் பாதிப்பு, உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்து, 'ஜி - 20' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) ஆலோசனை நடத்த உள்ளனர். 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடக்கும் இந்த சந்திப்பில், பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.



latest tamil news



உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், 4.24 லட்சம் பேருக்கு தொற்றியுள்ளது. உலகெங்கும், பலியானோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, 'சார்க்' எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார்.மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி - 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.


latest tamil news



இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுப வங்களும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன.முன்னுதாரண அமைச்சர்கள்சமூக விலக்கலை கடைப்பிடிக்கும்படி, நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவருடைய தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமரின் அரசு இல்லத்தில், நேற்று நடந்தது. வழக்கமாக கூட்டம் நடைபெறும் அறையில் இருக்கும், மிகப் பெரிய மேஜை நீக்கப்பட்டது.அனைத்து அமைச்சர்களும், தனித் தனியாக, போதிய இடைவெளிவிட்டு அமர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றனர். ஆவணங்கள் வைத்துக் கொள்ள, ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய மேஜை தரப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202010:34:29 IST Report Abuse
ஆப்பு மக்கள்தான் வீட்டில் முடங்கி காண்டாவணும். மோடி ஐயாவெல்லாம் வேலை பத்து சுறுசுறுப்பா யோகா பண்ணிக்கிட்டிருக்கணும். நாம செய்யறது வெட்டி வேலை. அதனால் நாமக்கல் கோழி போல ஊட்டிலேயே இருக்கணும். இவிங்க எல்லாம் நாட்டுக்கு உழைக்கிறேன்னு பிசியா இருக்கலாம். மக்களை அடிக்கிற போலீசை ஒரு நாலு நாள் வூட்டிலெ இருக்கச் சொல்லுங்க. அப்பத்தான் வெளியில் செல்லும்போது கிடைக்கும் சந்தோஷம் புரியும். என்னவோ சேவை முருக்கு எல்லாம் பண்றாங்களாம்.
Rate this:
A P - chennai,இந்தியா
26-மார்-202012:11:13 IST Report Abuse
A Pஅட உனக்கெல்லாம் நல்லது செய்ய வேண்டும், நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாதா ......றியே. உலகமே கவலை கொண்டு அடுத்தது என்ன செய்து மக்களைக் காப்பாற்றலாம், இந்தக் கிருமியை எப்படி ஒழிக்கலாம் என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி கருத்துக் போடுகிறாய்....
Rate this:
Cancel
26-மார்-202010:15:52 IST Report Abuse
S B. RAVICHANDRAN முதல்ல உங்களை காப்பாத்திங்கப்பா அப்புறம் உன்னால் எனக்கு வந்தது என்னால் உனக்கு வந்தது என சண்டை போடாதீர்கள். எப்ப சார் தடையை திறப்பீங்க, சாரி தடையை நீக்குவீங்க.
Rate this:
Cancel
Kalam - Salem,இந்தியா
26-மார்-202009:38:21 IST Report Abuse
Kalam அமெரிக்கா சார்பாக புரூக்ளின் ஹாஸ்பிடல் மருத்துவர் , இந்தியா சார்பாக அப்போலோ மருத்துவர் , இப்படி அந்த அந்த நாட்டின் மருத்துவ வல்லுநர் அடங்கிய குழுவும் விவாதத்துல பங்கெடுத்தா ஏதாவது முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு . இப்படி என்ன பிரச்சினைக்கும் அரசியல்வாதியே தீர்வு கொடுக்கணும்னா எப்படி முடியும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X